சூர்யாவைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் : உறுதிசெய்த விக்ரம்குமார்!

சூர்யாவைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் : உறுதிசெய்த விக்ரம்குமார்!

செய்திகள் 28-Apr-2016 10:59 AM IST Chandru கருத்துக்கள்

‘அலை’, ‘யாவரும் நலம்’ படங்களைத் தொடர்ந்து ‘24’ படத்தின் மூலம் தமிழில் மீண்டும் கால்பதித்துள்ளார் இயக்குனர் விக்ரம்குமார். சூர்யா வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள், டீஸர், டிரைலர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் ஐ ட்யூன்ஸ் தரவிறக்கத்தில் முன்னணி வகிக்கின்றன. இந்நிலையில், தற்போது சென்னை சத்யம் திரையரங்கத்தில் ‘24’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பின்போது 24 படத்தின் கதைக்களத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ‘ஆத்ரேயா ரன்’ என்ற ஆன்ட்ராய்டு கேம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கேமை மே 1ஆம் தேதி முதல் தரவிறக்கம் செய்ய முடியுமாம்.

இந்த சந்திப்பில் நடிகர் சூர்யா, இயக்குனர் விக்ரம்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டு பேசிவருகிறார்கள். சூர்யா ஹீரோவாக நடித்துள்ள ‘24’ படத்திற்குப் பிறகு மீண்டும் தெலுங்குப் படம் ஒன்றை இயக்குகிறாராம் விக்ரம்குமார். அல்லு அர்ஜூன் நாயகனாக நடிக்கவிருக்கும் இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் தற்போது பரபரப்பாக போய்க் கொண்டிருப்பதாக விக்ரம்குமார் நம் நிருபரிடம் பிரத்யேகமாக தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா - முதல் பார்வை


;