விஷாலுடன் ‘கத்திச்சண்டை’க்கு தயாரான தமன்னா!

விஷாலுடன் ‘கத்திச்சண்டை’க்கு தயாரான தமன்னா!

செய்திகள் 28-Apr-2016 11:06 AM IST Chandru கருத்துக்கள்

‘தர்மதுரை’ படத்தின் மூலம் முதல்முறையாக விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த நடிகை தமன்னா, அடுத்ததாக இன்னொரு முன்னணி ஹீரோவுடன் முதல்முறையாக இணையவிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, நடிகர் சங்க செயலாளரும், நடிகரும், தயாரிப்பாளருமான விஷால்தான். ‘கொம்பன்’ முத்தையா இயக்கத்தில் தான் நடிக்கும் ‘மருது’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்டதால், தற்போது ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த ‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படமொன்றில் நாயகனாக நடிக்கிறார் விஷால்.

‘கத்திச்சண்டை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக முதல் முறையாக தமன்னா நடிக்கிறார். மற்றும் வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு, சம்பத் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை காமெடி, கமர்ஷியல் படமாக சுராஜ் இயக்குகிறார். மே 2ம் தேதி சென்னையில் பூஜையுடன் துவங்கி தொடர்ந்து படிப்பிடிப்பு நடைபெற உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;