ட்விட்டர் டிரென்டில் ‘தெறி’க்க விடுவாரா ஜி.வி.பிரகாஷ்?

ட்விட்டர் டிரென்டில் ‘தெறி’க்க விடுவாரா ஜி.வி.பிரகாஷ்?

செய்திகள் 28-Apr-2016 1:54 PM IST Chandru கருத்துக்கள்

சமூகவலைதளங்களில் பிரபலமாக இருக்கும் நபர்களில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் முக்கியமானவர். இவரின் ஃபேஸ்புக் பக்கத்தை 21 லட்சத்திற்கு மேற்பட்டோரும், ட்விட்டர் கணக்கை கிட்டத்தட்ட 10 லட்சம் பேரும் பின்தொடர்ந்து வருகிறார்கள். இதனால் இவரின் ஸ்டேட்டஸ்களும், அப்டேட்களும் உடனடியாக பல லட்சம் ரசிகர்களின் பார்வைக்குச் சென்றடையும். சமீபத்தில் கூட, ஆங்கில நாளிதழ் கருத்துக்கணிப்பு ஒன்றில் ‘தில்லுமுல்லு’ நடந்ததாகக் கூறி போல்டாக இவர் ஏற்படுத்திய சர்ச்சை சமூக வலைதளங்களை அதிர வைத்தது.

இந்நிலையில், சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி. நடித்திருக்கும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை இன்று மாலை 5 மணியளவில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுகிறார். இந்த டீஸரில் விஜய்யின் ‘தெறி பேபி...’, அஜித்தின் ‘தெறிக்க விடலாமா...’ போன்ற வசனங்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், ஜி.வியே இந்த டீஸர் குறித்து அவ்வப்போது சில செய்திகளை பகிர்ந்து வருகிறார். இப்படத்தில் ‘மொட்டை’ ராஜேந்திரன் மகாபலி மகாவாகவும், விடிவி கணேஷ் ஸ்கெட்ச் பெஞ்சமினாகவும், யோகி பாபு ‘லோன்லி டைகர்’ என்ற கேரக்டரில் நடித்திருப்பதாகவும் ஜி.வி. தெரிவித்திருக்கிறார். இது இன்று வெளியாகும் டீஸரில் தெரியவரும்.

டார்லிங் மூலம் பரவலான ரசிகர்களைப் பெற்ற ஜி.வி, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ மூலம் சர்ச்சை நாயகனாகவும் வலம் வந்தார். இதனால் இன்று வெளியாகவிருக்கும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ டீஸருக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் விஜய்யின் ‘தெறி’ படம் ஜி.வி. இசையமைப்பில் உருவான 50வது படம் என்பதால், ஜி.வி.பிரகாஷிற்கு விஜய் ரசிகர்களின் ஆதரவு பெருவாரியாக குவிந்துள்ளது. இதனால் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ டீஸர் ட்விட்டரில் டிரென்டாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;