ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் செப்டம்பர் 23ல் ரிலீஸ்!

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் செப்டம்பர் 23ல் ரிலீஸ்!

செய்திகள் 28-Apr-2016 2:42 PM IST Chandru கருத்துக்கள்

‘தீனா’ மூலம் தமிழில் இயக்குனராக களமிறங்கிய ஏ.ஆர்.முருகதாஸ், ‘ஸ்டாலின்’ படம் மூலம் 2006ஆம் ஆண்டு தெலுங்கிலும், ‘கஜினி’ மூலம் 2008ஆம் ஆண்டு ஹிந்தியிலும் கால் பதித்தார். அமீர்கான் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘கஜினி’ பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிப்படம். அதனைத் தொடர்ந்து, தமிழில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிக்க ‘ஹாலிடே’வாக மாற்றினார் ஏ.ஆர்.எம். இதனைத் தொடர்ந்து அவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 3வது பாலிவுட் படமான ‘அகிரா’ வரும் செப்டம்பர் 23ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாயகியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ஆக்ஷன் த்ரில்லரான ‘அகிரா’வில் சோனாக்ஷி சின்ஹா நடித்திருக்கிறார். இவருடன் ராய் லக்ஷ்மி, இயக்குனர் அனுராக் காஷ்யப், கொங்கணா சென், மிதுன் சக்கரவர்த்தி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஔப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விஷால் சேகர் இசையமைத்துள்ளார்.

‘அகிரா’வைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகவிருக்கும் புதிய படமொன்றில் மகேஷ் பாபு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தா தா 87 டீஸர்


;