6 நாடுகளில் வெளியாகும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ பாடல்கள்!

6 நாடுகளில் வெளியாகும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ பாடல்கள்!

செய்திகள் 28-Apr-2016 4:50 PM IST Top 10 கருத்துக்கள்

வாகை சூடவா படம் மூலம் பிரபலமான இசை அமைப்பாளர் ஜிப்ரான், அதன்பிறகு உத்தம வில்லன், பாப்பநாசம், தூங்காவனம் படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் கமலஹாசனுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தற்போது இவர் இசையமைத்திற்கும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ திரைப்படத்தின் ஆறு பாடல்களை, ஆறு நாடுகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கி, ‘சிங்கபூர் மீடியா டெவலப்மெண்ட் அத்தாரிட்டி’ துணையோடு, ‘காமிக்புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட்’ நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

புதுமுகங்கள் கோகுல் ஆனந்த் மற்றும் அஞ்சு குரியன் நடிக்கும் இப்படத்தின் ஆறு பாடல்களும், விரைவில் அனைவரது கவனத்தையும் ஈர்க்க கூடும் என்று எதிர்ப்பார்கபடுகிறது. சிங்கப்பூரில் ஆரம்பித்து, ஐந்து நாடுகளில் ஒவ்வொரு பாடலை வெளியிடும் இந்த தனித்துவமான யோசனைக்கு உலகநாயகன் தன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். “முந்தைய காலத்தில் நம் தமிழ் மன்னர்கள் பல நாடுகள் மீது படையெடுத்து சென்று கண்டறிந்த சிங்கப்பூரம் எனும் நகரத்தைதான் நாம் இப்போது சிங்கப்பூர் என்று அழைக்கிறோம். அதே போல் ஜிப்ரானின் இந்த புதிய முயற்சி இதோடு முடிந்துவிடாமல், கின்னஸ் சாதனையை நோக்கி பயணிக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்’ என்றாராம் உலகநாயகன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்


;