2011 தேர்தலுக்கு பின் ‘கோ’, 2016 தேர்தலுக்குப் முன் ‘கோ2’

2011 தேர்தலுக்கு பின் ‘கோ’, 2016 தேர்தலுக்குப் முன் ‘கோ2’

செய்திகள் 30-Apr-2016 10:45 AM IST Chandru கருத்துக்கள்

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, பிரகாஷ் ராஜ் நடித்து 2011ஆம் ஆண்டு வெளிவந்த ‘கோ’ படத்தின் இரண்டாம் பாகம், அதே நிறுவனத்தின் தயாரிப்பில் சரத் இயக்க, பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகியிருக்கிறது. நிக்கி கல்ராணி நாயகியாக நடித்திருக்கும் இந்த பொலிட்டில் த்ரில்லருக்கு லியோ ஜான் இசையமைத்துள்ளார்.

‘கோ 2’ படத்தை மே 13ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிருக்கிறார்கள். தமிழக தேர்தல் மே 16ஆம் தேதி நடைபெறவிருக்க, அதற்கு முன்பாக ‘கோ2’ படம் வருவது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இப்படம் அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதுதான். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், முதல் பாகமான ‘கோ’ படம், 5 வருடங்களுக்கு முன்பு நடந்த தமிழகத் தேர்தலுக்கு ஒரு வாரம் கழித்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது அதன் 2ஆம் பாகம் சரியாக தேர்தல் சமயத்தில் வெளியாகவிருப்பதால், இப்படம் பெரிய வெற்றிபெறும் என தயாரிப்பு தரப்பு நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ரசிகர்களின் பெருவாரியான வாக்குகள் ‘கோ 2’விற்கு கிடைக்குமா?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாமி 2 ட்ரைலர்


;