புதுமுகங்கள் நடிக்கும் ‘எல்லாமே நீ தான்’

புதுமுகங்கள் நடிக்கும் ‘எல்லாமே நீ தான்’

செய்திகள் 2-May-2016 11:37 AM IST VRC கருத்துக்கள்

‘மைதிலி குமாரி புரொடக்ஷன்ஸ்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘எல்லாமே நீதான்’. இப்படத்தின் கதை எழுதி, இயக்கி தயாரித்து, நாயகனாக அறிமுகமாகிறார் கே.எஸ்.சிவா. கதாநாயகிகளாக புதுமுகங்கள் நம்ரதா, நட்சத்திரா நடிக்கிறார்கள். இவர்களுடன் வில்லனாக ஜிந்தா நடிக்கிறார். இப்படம் குறித்து கே.எஸ்.சிவா கூறும்போது, ‘‘மருத்துவ கல்லூரி மணாவரான சிவா பொறியியல் கல்லூரி மாணவி மைதிலியை காதலிக்கிறார். சிவாவை சந்திக்க மைதிலி காத்திருக்கும்போது போதை ஆசாமிகளால் கடத்தப்பட்டு கொலையாகிறாள். தேடிப்போன சிவாவை ஆசாமிகள் கத்தியால் குத்த, அதிலிருந்து தப்பி பிழைத்து காதலியை கொன்றவர்களை பழிவாங்க துடிக்கிறார் சிவா. மைதிலியை கொன்றவர்களை சிவா பழி வாங்கினாரா? சிவாவின் காதல் என்ன ஆனது? இந்த கேள்விகளுக்குன் பதில் தரும் படமே ‘எல்லாமே நீ தான்’. இப்படத்திற்கு குட்லக் ரவி இசை அமைக்கிறார். தசரதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்யவிருக்கிறோம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;