சென்னையில் துவங்கியது கத்திச் சண்டை!

சென்னையில் துவங்கியது கத்திச் சண்டை!

செய்திகள் 2-May-2016 11:54 AM IST VRC கருத்துக்கள்

‘மருது’வை தொடர்ந்து ‘கத்திச் சண்டை’ பட வேலைகளில் பிசியாகி விட்டார் விஷால்! ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயரித்த ‘மெட்ராஸ் என்டர்பிரைசஸ்’ எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்குகிறார். இப்படத்தில் விஷாலுடன் முதன் முதலாக ஜோடி சேருகிறார் தமன்னா. இந்த படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ‘கத்திச் சண்டை’யின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. இப்படத்தில் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். காமெடிக்கு வடிவேலு, சூரி ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்கிறார். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படம் குறித்து விஷால் பேசும்போது, ‘‘என்னகு இன்னொரு பரிமாணத்தை இப்படம் கொடுக்கும் என்று நம்புகிறேன். ஒன்பது வருடங்களுக்கு முன்பு நானும், வடிவேலுவும் ‘திமிரு’ படத்தில் நடித்தோம். ‘திமிரு’ வெற்றிப் படமாக அமைந்தது. இப்படத்தில் நாங்கள் இரண்டு பேரும் மீண்டும் இணைகிறோம். அவரது காமெடியை நானும் கண்டு களிக்க காத்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.

வடிவேலு காமெடி கேரக்டரில் நடிப்பது குறித்து பேசும்போது, ‘’இனி மேல் இரண்டு டிராக் தான். ஹீரோ வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன், காமெடியனாகவும் நடிப்பேன்! இனி நிறைய படங்களில் காமெடி கேரக்டர்களில் நடிக்க உள்ளேன். இப்படத்தில் நமக்கு ஏற்ற மாதிரி நிறைய தீனி போடுவார் இயக்குனர் சுராஜ் என்று நம்புகிறேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;