‘கொம்பன்’ படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கியுள்ள படம் ‘மருது’. விஷால், ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்துள்ள இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. டி.இமான் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்களுக்கும், டிரைலருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முத்தையா இயக்கி வெற்றிப் படமாக அமைந்த ‘கொம்பன்’ படத்தைப் போலவே இப்படமும் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ளது. ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ அன்பு செழியன் தயாரித்துள்ள இப்படத்தை இம்மாதம் 20-ஆம் தேதி திரைக்கு கொண்டு வருவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருவதாக இப்படத்தின் தயாரிப்பு தரப்பிலிருந்து தகவல் கிடைத்துள்ளது. சுந்தர்.சி.இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி முதலானோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மதகஜராஜா’ திரைப்படம் பலமுறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் இன்னமும் ரிலீசாகாமல் இருந்து வருகிறது. கடைசியாக இப்படம் இம்மாதம் 13-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் ‘மதகஜராஜா’ 13-ஆம் தேதியும் வெளியாகாது என்று கூறப்படுகிறது. அதனால் விஷாலின் ‘மருது’வை இம்மாதம் 20-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்து அதற்கான வேலைகளை துரிதப்படுத்தியிருக்கிறார்கள்!
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...
மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் ‘FIR’. ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம்...