கௌதம் மேனன் - தனுஷ் படம் எப்போது ரிலீஸ்?

கௌதம் மேனன் - தனுஷ் படம் எப்போது ரிலீஸ்?

செய்திகள் 6-May-2016 3:46 PM IST Chandru கருத்துக்கள்

யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீரென கௌதம்மேனன் & தனுஷ் பட அறிவிப்பு வெளிவந்தது. ஒருபுறம் சிம்புவை நாயகனாக வைத்து தான் இயக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ இறுதிக்கட்டத்தை எட்டியிருக்க, இன்னொருபுறம் தனுஷுடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தைத் துவங்கினார் கௌதம். ஜெயராம் மகன் காளிதாஸ் ஹீரோவாக நடிக்கும் ‘ஒரு பக்க கதை’ படத்தின் நாயகி மேக்னா ஆகாஷ், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வில் தனுஷுக்கும் ஜோடியாகியிருக்கிறார். அதோடு முக்கிய வேடமொன்றில் ‘பாகுபலி’ ராணாவும் நடிக்கிறார்.

ஜோமோன் டி.ஜான்சன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். மலையாளத்தில் புகழ்பெற்ற இவர் ஏற்கெனவே தமிழில் ‘பிரம்மன்’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அடுத்த மாதத்திற்குள் காட்சிகளுக்கான படப்பிடிப்பு முழுவதையும் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதன்பிறகு சின்னச் சின்ன பேட்ஜ் ஒர்க்கிற்கான படப்பிடிப்பு மட்டும் நடைபெறும் எனத் தெரிகிறது. ஜூலை 28ல் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு படத்தை தீபாவளி வெளியீடாகக் கொண்டு வந்தால், பெரிய அளவு வசூலாகும் என்ற திட்டத்தில் இருக்கிறார்களாம் ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோகஷன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;