நடிப்புக்கு பிரேக் போட்ட சமந்தா!

நடிப்புக்கு பிரேக் போட்ட சமந்தா!

செய்திகள் 9-May-2016 4:22 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் சமந்தா, கொஞ்ச நாட்களுக்கு இனி புதிய படங்களை ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்று ட்வீட் செய்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தெறி’ மற்றும் ‘24’ படங்களை தொடர்ந்து பிவிபி சினிமாஸ் தயாரிப்பான ‘பிரம்மோஸ்தவம்’, ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்துள்ள ‘ஜனதா கரேஜ்’ ஆகிய தெலுங்கு படங்கள் வெளியாகவிருக்கிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்துள்ளார் சமந்தா. தற்போது நடிப்புக்கு ஒரு பிரேக் எடுக்க முடிவு செய்துள்ள சமந்தா அது குறித்து ட்வீட் செய்துள்ளதில் ‘ ‘‘இப்போது நிம்மதியாக தூங்குகிறேன். நான் நடித்து வந்த சில படங்களின் வேலைகள் முடிந்து அப்படங்கள் வெளிவந்து விட்டன! கடந்த 8 மாதங்கள் கடுமையாக இருந்தது. களப்படைந்து சோர்ந்து போனாலும் அதையெல்லாம் தாண்டி வந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி! எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வரும் என் குடும்பத்தினருக்கு நன்றி! நான் சிறந்த மகளாகவோ, தோழியாகவோ இருந்ததில்லை. இனி சற்று நிதானத்துடன் போக முடிவு செய்துள்ளேன். அதனால் சில காலங்களுக்கு இனி புதிய படங்களை ஒப்புக்கொள்ளப் போவதில்லை. எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி’’ என்று குறிப்பிட்டுள்ளார். சமந்தாவின் இந்த திடீர் அறிவிப்பு சினிமாவிலுள்ள பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவம் ட்ரைலர்


;