கிராமத்துப் பெண்ணாக ‘என்னை அறிந்தால்’ நாயகி!

கிராமத்துப் பெண்ணாக ‘என்னை அறிந்தால்’ நாயகி!

செய்திகள் 10-May-2016 10:48 AM IST Chandru கருத்துக்கள்

கௌதம்மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் பார்வதி நாயர். பெங்களூரைச் சேர்ந்த பார்வதி, அதன்பிறகு கமலின் ‘உத்தவில்லன்’ படத்திலும், கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்திலும் சின்ன வேடம் ஒன்றில் நடித்தார். அவர் நடித்த 3 படங்களுமே சிட்டி பெண் கேரக்டராக அமைந்துவிட்டாலும், அடுத்ததாக அவர் ‘நட்டி’ நட்ராஜுடன் நடித்துள்ள ‘எங்கிட்ட மோதாதே’ படத்தில் கிராமத்துப் பெண் வேடத்தில் தோன்றியிருக்கிறாராம். இப்படத்தில் நடிகை சஞ்சிதா ஷெட்டியும் நடித்துள்ளார். வில்லேஜ் கேரக்டர் குறித்துப் பேசிய பார்வதி நாயர், ‘‘இந்த வேடத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேனா இல்லையா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், அந்த வேடத்தில் நான் சிறப்பாக இருந்ததாகவே உணர்கிறேன். கிராமத்து மனிதர்கள் அன்பாகவும், ஆதரவாகவும் பழகுகிறார்கள்!’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ


;