படப்பிடிப்பு துவங்கும் நாளிலேயே ஃபர்ஸ்ட் லுக்!

படப்பிடிப்பு துவங்கும் நாளிலேயே ஃபர்ஸ்ட் லுக்!

செய்திகள் 11-May-2016 10:42 AM IST VRC கருத்துக்கள்

விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் இணைந்து நடிக்கும் ‘றெக்கை’ படத்தின் பூஜை கடந்த 6-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றதை தொடர்ந்து நாளை (12—5-16) இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவகவிருக்கிறது. பெரும்பாலும் ஒரு படம் துவங்கிய பிறகு ஒரு சில நாட்கள் கழித்து தான் அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாவது வழக்கம். ஆனால் ‘றெக்க’ படத்தை பொறுத்தவரையில் படப்பிடிப்பு துவங்கும் நாளிலேயே ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிடவிருக்கிறார்கள். அருண் விஜய் நடிப்பில் ‘வா டீல்’ படத்தை இயக்கியுள்ள ரத்தின சிவா இயக்கும் ‘றெக்கை’யை விஜய் சேதுபதி நடிப்பில் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை தயாரித்த ‘காமன் மேன்’ பி.கணேஷ் தயாரிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். எம்.சி.கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கெனவே விஜய் சேதுபதியும், லட்சுமி மேன்னும் ‘ஜிகர்தண்டா’ படத்தில் நடித்திருக்கிறார்கள் என்றாலும் இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம் ‘றைக்க’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;