கே.வி.ஆனந்த், விஜய் சேதுபதி படத்தில் மஞ்சிமா மோகன்?

அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வரும் மஞ்சிமா மோகன்.

செய்திகள் 11-May-2016 12:58 PM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வரும் மஞ்சிமா மோகன், எஸ்.அர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். இதில் கௌதம் மேனன் இயக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு நடித்து வரும் மஞ்சிமா மோகனனை தான் அடுத்து விஜய் சேதுபதியை கதாநாயகனாக நடிக்க வைத்து இயக்கவிருக்கும் படத்திற்காக இயக்குனர் கே.வி.ஆனந்தும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இப்படம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகிறது என்றும், அநேகமாக கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி மஞ்சிமா மோகன் தான் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த படங்கள் தவிர உதயநிதி நடிக்கும் ஒரு படத்தில் நடிக்கவும் மஞ்சிமா மோகனிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;