‘தெறி’ திருட்டு விசிடி – விஷால் எடுத்த நடவடிக்கை!

‘தெறி’ திருட்டு விசிடி – விஷால் எடுத்த நடவடிக்கை!

செய்திகள் 14-May-2016 12:10 PM IST VRC கருத்துக்கள்

விஷால் தான் நடித்த படங்கள் என்றில்லாமல் யார் நடித்த படமாக இருந்தாலும் அப்படங்களின் திருட்டு விசிடி வெளியாகும்போது நடவடிக்கை எடுக்க தயங்குவதில்லை. சமீபத்தில் சென்னியில் நடந்த ‘மருது’ பட விழாவில் பேசும்போது கூட விஷால் திருட்டு விசிடி குறித்து பேசியிருந்தார்! இந்நிலையில் விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் திருட்டு விசிடி சம்பந்தமாக விஷால் எடுத்த ஒரு நடவடிக்கை குறித்து அவர் தரப்பிலிருந்து வந்த செய்தியின் விவரம் வருமாறு

பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தெறி’ திரைப்படம் ஒளிபரப்பட்டுள்ளது. அதைப் பார்த்த பயணிகளில் ஒருவர் இந்தச் செய்தியை நடிகர் விஷால் நம்பரை இணையதளம் மூலம் கண்டறிந்து அவரை ஃபோனில் தொடர்பு கொண்டு இச்செய்தியை கூறியிருக்கிறார்.
அந்த நிகழ்வை உறுதி செய்யும் விதமாக நடிகர் விஷால் அந்த பயணியிடம் ஒளிபரப்பாகும் ‘தெறி’ படத்தை செல்ஃபோனில் வீடியோ எடுத்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ள அந்த பயணியும் அதை செல்ஃபோனில் வீடியோ எடுத்து விஷாலுக்கு அனுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து விஷால் இந்த விஷயம் குறித்து திருட்டு விசிடி தடுப்பு சிறப்பு ஆய்வாளர் ஜெயலட்சுமியிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் திருட்டு விசிடி சிறப்பு ஆய்வாளர் ஜெயலட்சுமியின் அணையின்படி ஆய்வாளர்கள் நந்தகுமார் மற்றும் மகேந்திரன் இருவரும் மதுரவாயில் அருகே அந்த பேருந்தை மடக்கிப் பிடித்து அந்த பேருந்தை ஓட்டிய ஓட்டுனரை கைது செய்துள்ளனர்.

திருட்டு விசிடி விஷயத்தில் தொடர்ந்து துணிச்சலாக செயல்பட்டு வரும் விஷாலின் நடவடிக்கைகளை பலர் பாராட்டி வருகின்றனர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;