நடிகர் சங்கத்தில் பாபி சிம்ஹா புகார்!

நடிகர் சங்கத்தில் பாபி சிம்ஹா புகார்!

செய்திகள் 17-May-2016 11:13 AM IST VRC கருத்துக்கள்

கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் பாபி சிம்ஹா புகைப்படத்துடன் ‘மீரா ஜாக்கிரதை’ என்ற ஒரு திரைப்படத்தின் விளமர்பம் வந்து கொண்டிருக்கிறது. இப்படம் சம்பந்தமாக நடிகர் பாபி சிம்ஹா, நடிகர் சங்க தலைவருக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்
‘‘ஐயா, நான் கடந்த மூன்று வருடங்களாக நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக சிலர் செயல்பட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களாக சில தினசரி நாளிதழ்களில் நான் யார் என்று கேள்விப்படாத இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பெயரில் ‘மீரா ஜாக்கிரதை’ எனும் படத்தில் நான் நடித்ததாக விளம்பரம் செய்து வருகின்றனர். மேலும் அந்த விளம்பரத்தில் எனது முந்தைய படமான ‘உறுமீன்’ படத்தின் புகைப்படங்களை பயன்படுத்துகின்றனர். நான் ‘மீரா ஜாக்கிரதை’ படத்தில் நடித்ததும் இல்லை டப்பிங் பேசியதும் இல்லை. அந்த படத்தின் கதாநாயகி என்று கூறப்படும் மோனிகா அவர்களை நான் நேரில் பார்த்ததும் இல்லை. ஆகவே, மேற்படி நான் கூறிய தகவல்களுக்கு தக்க நடவடிக்கை எடுத்து எனக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்கி தரும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பாபி சிம்ஹாவின் இந்த புகார் மீது நடிகர் சங்கம் எத்தகைய நடவடிக்கை எடுக்கும் என்பது விரைவில் தெரிய வரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவ் தமிழ் - ட்ரைலர்


;