கௌதம் படத்தில் இரண்டு தோற்றங்களில் தனுஷ்?

கௌதம் படத்தில் இரண்டு தோற்றங்களில் தனுஷ்?

செய்திகள் 18-May-2016 1:00 PM IST Chandru கருத்துக்கள்

வித்தியாசமான படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் தனுஷ். அந்தவகையில் தற்போது மட்டும் கையில் 4 படங்களை வைத்திருக்கிறார். பிரபுசாலமனின் தொடரி, துரை செந்தில்குமாரின் கொடி, கௌதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, கார்த்திக் சுப்பராஜுடன் ஒரு படம், பாலாஜி மோகனின் ‘மாரி 2’ ஆகிய படங்கள் தனுஷ் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. இதில், தொடரி ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. கொடி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கௌதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் 20 நாள் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில், அப்படத்தின் முதல் புகைப்படம் ஒன்றை ‘ஒன்ராக என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த 20 நாள் படப்பிடிப்பில், துருக்கியில் பாடல் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்களாம். இதனைத் தொடர்ந்து விரைவில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தவிருக்கிறார்களாம். இப்படத்தில் பீரியட் போர்ஷன் ஒன்றும் உள்ளதாம். அதற்காக பழைய மாடல் கார் ஒன்றையும் வாங்கியுள்ளர்களாம். இந்த பகுதிக்கான படப்பிடிப்பின்போது தனுஷ் வித்தியாசமான தோற்றத்தில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்படத்தில் 2 வித்தியாசமான தோற்றங்களில் தனுஷ் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;