நேரத்தை குறைக்க ‘கபாலி’ டீம் எடுத்த அதிரடி முடிவு?

நேரத்தை குறைக்க ‘கபாலி’ டீம் எடுத்த அதிரடி முடிவு?

செய்திகள் 21-May-2016 10:17 AM IST Chandru கருத்துக்கள்

2 கோடி பார்வையிடல்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது ‘கபாலி’ டீஸர். ‘கபாலிடா....’ எனச் சொல்லியபடி வில்லன்களைப் பந்தாடும் சூப்பர்ஸ்டார் தரிசனத்திற்காக ரஜினி ரசிகர்கள் ‘மகிழ்ச்சி’யோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜூலை 1ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகவிருக்கும் ‘கபாலி’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் ‘ஜெட்’ வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஜூன் முதல்வாரத்தில் சந்தோஷ் நாராயணனின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘கபாலி’ பாடல்களை வெளியிட்ட கையோடு புதிய டிரைலர் ஒன்றையும் வெளியிடவிருக்கிறார்கள்.

இந்நிலையில், ‘கபாலி’ படத்தின் ‘கட்’ செய்யப்படாத வெர்ஷன் கிட்டத்தட்ட 2 மணி 50 நிமிட நேரம் ஓடக்கூடியதாய் இருப்பதாக, படக்குழுவிற்கு நெருக்கமானவர்களிடமிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. ரசிகர்கள் எந்த இடத்திலும் சோர்வடையக்கூடாது, படத்தோடு ‘என்கேஜ்மென்ட்’டாக இருக்க வேண்டும் என்பதற்காக 20 நிமிடக்காட்சிகளை குறைக்கச் சொல்லி ‘கபாலி’ பட டெக்னீஷியன் டீம் இயக்குனர் ரஞ்சித்திடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்களாம். ஆனால், படத்தில் எந்தக்காட்சியை எடுத்தாலும், அது படத்தின் தன்மையை பாதிக்கும் என்பதால் ஓட்ட நேரத்தை குறைக்கும் முடிவை தற்காலிகமாக தள்ளி வைத்திருக்கிறாராம் ரஞ்சித். என்ன நடக்கும் என்பது போகப்போகத்தான் தெரியும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;