‘கொக்கி குமாரு’க்கு வயசு 10!

‘கொக்கி குமாரு’க்கு வயசு 10!

செய்திகள் 26-May-2016 10:57 AM IST Chandru கருத்துக்கள்

வெங்கடேஷ் பிரபு கஸ்தூரி ராஜா என்று சொன்னால் ஒரு கணம் யோசிப்பவர்கள்கூட ‘கொக்கி குமார்’ என்று சொன்னவுடன்... ‘அட நம்ம தனுசு...’ என பரிச்சயம் காட்டுவார்கள். அந்த அளவுக்கு தனுசின் சினிமா கேரியரில் மறக்க முடியாத கேரக்டராக அமைந்துவிட்டது ‘கொக்கி குமார்’. கஸ்தூரி ராஜாவால் ‘துள்ளுவதோ இளமை’ மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டாலும், அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘காதல் கொண்டேன்’ படமே அனைத்துத்தரப்பு ரசிகர்களையும் தனுஷுக்கு பெற்றுத் தந்தது.

செல்வராகவன் இயக்கத்தில் இரண்டாவதாக தனுஷ் நடித்த படம் ‘புதுப்பேட்டை’. ஒரு சேரிப்பையன் அடியாளாக மாறி, ரவுடியாக வளர்ந்து, தாதாவாக அவதாரம் எடுத்து அரசியலை எப்படி ஆட்டிப்படைக்கிறான் என்பதே ‘புதுப்பேட்டை’யின் கதைக்களம். இப்படத்தில் தனுஷ் ஏற்றிருந்த ‘கொக்கி குமார்’ கதாபாத்திரம் ரவுடி கேரக்டர்களுக்கு ஒரு முன்னுதாரணம் என்று சொல்லுமளவுக்கு பிரபலம். கடந்த வருடம் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த ‘வை ராஜா வை’ படத்தின் க்ளைமேக்ஸில் ‘கொக்கி குமார்’ கேரக்டரில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் தனுஷ். இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காகவே தியேட்டர்களுக்கு படையெடுத்தனர் தனுஷ் ரசிகர்கள்.

தனுஷிற்கும் மிகவும் பிடித்த இந்த ‘கொக்கி குமாரு’க்கு இப்போது வயது 10. ஆம்... 2006ஆம் ஆண்டு மே 26ஆம் தேதிதான் ‘புதுப்பேட்டை’ படம் வெளியானது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;