பயம் காட்டுவாரா ‘கபாலி’ நாயகி?

பயம் காட்டுவாரா ‘கபாலி’ நாயகி?

செய்திகள் 26-May-2016 11:24 AM IST Chandru கருத்துக்கள்

மேடை நடிகையாக இருந்து ஹீரோயினாக 2005ஆம் ஆண்டு ஹிந்தியில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. ஹிந்தி மட்டுமின்றி பெங்காலி, மராத்தி என வட இந்திய சினிமாவில் பாப்புலரான ராதிகா, பிரகாஷ் ராஜின் ‘தோனி’ படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாக ‘அழகுராஜா’ படத்தில் நடித்தார். இப்போது இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரஜினியின் ‘கபாலி’ பட நாயகியும் இவர்தான்.

ஜூலை 1ஆம் தேதி ‘கபாலி’ தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் தனது ரசிகர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை ‘பயம்’ காட்டவிருக்கிறார் ராதிகா ஆப்தே. ஆம்... அவர் நாயகியாக நடித்திருக்கும் பாலிவுட் படம் ‘ஃபோபியா’ நாளை வெளியாகிறது. இப்படத்தில் பயந்த சுபாவமுள்ள ஒரு பெண்ணாக நடித்திருக்கிறார் ராதிகா. வீட்டை விட்டு வெளியே செல்வதற்கே பயந்து நடுங்கும் ராதிகா ஆப்தே, வீட்டிற்குள்ளேயும் நடக்கும் சின்னச் சின்ன விஷயங்களைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார். அவர் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்? அதனால் அவருக்கு என்னென்ன ஆபத்துகள் நேர்கின்றன? அதிலிருந்து மீண்டாரா, இல்லையா? என்பதற்கான விடைதான் இப்படம்.

‘அகல்யா’ என்ற குறும்படத்தின் மூலம் யு ட்யூப்வாசிகளின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற ராதிகாவின் ‘ஃபோபியா’ பட டிரைலரும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் அவரின் இப்படம் ரசிகர்களை பெரிய அளவில் பயமுறுத்தும் என்கிறது பாலிவுட் வட்டாரங்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் - அஸ்வின் தாத்தா டீசர்


;