இரண்டு நாட்களுக்கு முன்பு அடையாறு பாலம் அருகே ஒரு பெண்ணுடன் இரு வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அந்த நேரத்தில் அந்த வழியே காரில் வந்த சூர்யா, காரிலிருந்து இறங்கி வந்து அந்த வாலிபர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு, பெண்ணை பத்திரமாக சொல்லும்படி கூறிவிட்டுச் சென்றாராம். ஆனால், சம்பந்தப்பட்ட வாலிபர், சூர்யா தன்னை அடித்துவிட்டதாக மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்ததோடு, சூர்யாமீது போலீஸிலும் புகார் கொடுத்துள்ளார். இந்த பரபரப்புகளுக்கு இடையில் நடிகர் சூர்யா அமைதியாக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று பாதிக்கப்பட்ட பெண்ணான புஷ்பா என்பவரே, தனக்கு என்ன நேர்ந்தது, சூர்யா என்ன செய்தார் என்பதை விளக்கமாக ட்வீட் செய்திருக்கிறார். நடிகர் சூர்யாவும் அவருக்கு நன்றி சொல்லி சர்ச்சைக்கு முற்றுப்புள்ள வைத்தார்.
புஷ்பா தனது ட்வீட்டில்.... ‘‘நேற்று என்னிடம் தவறாக நடக்க முயன்ற இரண்டு பையன்கள் தக்க சமயத்தில் வந்து தடுத்து நிறுத்தியதற்காக சூர்யாவிற்கு மிக்க நன்றிகள். என்மீது கை வைக்க விடாமலும் சூர்யா தடுத்தார். அந்த பையன்கள் என்னிடம் பணம் கேட்டு மிரட்டினார்கள். மேலும், என்மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்போவதாகவும் சொன்னார்கள். பெரிய கூட்டத்திற்கு நடுவே தனியாளாக மாட்டிக்கொண்டு தவித்துக் கொண்டிருந்தேன். நல்லவேளையாக சூர்யா வந்து எனக்கு உதவி செய்தார். தக்க தருணத்தில் வந்து உதவிய சூர்யாவிற்கு நன்றிகள்!’’ என்று ட்வீட் செய்திருக்கிறார்.
நடிகர் சூர்யாவும், ‘‘இத்தனை நாடகங்கள் அரங்கேறிய பிறகும் தைரியமாக முன்வந்து நடந்த உண்மையைச் சொன்னதற்கு என் நன்றிகள். உங்கள் உடல்நலனை கவனித்துக் கொள்ளவும்!’’ அந்த பெண்ணிற்கு பதில் ட்வீட் செய்துள்ளார்.
In midst of all the drama appreciate your boldness for this message!! Respects!! Pls take care! Thank you All!🙏 https://t.co/Dw3aab0IR1
— Suriya Sivakumar (@Suriya_offl) May 31, 2016
பல வெற்றிப் படங்களை தயரித்து வழங்கிய சி.வி.குமார் இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கியுள்ள படம்...
64வது தேசிய திரைப்பட விருதுப்பட்டியலில் கோலிவுட்டிற்கு மொத்தம் 6 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன....
இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சூரி. மதுரை...