சினிமா ரசிகர்கள் பற்றிய படம் ‘அட்ரா மச்சான் விசிலு’

‘மிர்ச்சி’ சிவா, ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் இணைந்து கலக்கும் ‘அட்ரா மச்சான் விசிலு’ விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

செய்திகள் 4-Jun-2016 4:03 PM IST VRC கருத்துக்கள்

‘மிர்ச்சி’ சிவா, ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் படம் ‘அட்ரா மச்சான் விசிலு’. ஜீவா நடித்த ‘கச்சேரி ஆரம்பம்’ படத்தை இயக்கிய திரைவாணன் இயக்கியுள்ள இப்படத்தில் கதையின் நாயகியாக நேனா சர்வார் நடிக்க இவர்களுடன் சென்ட்ராயன், மன்சூரலிகான், அருண் பாலாஜி, சிங்கமுத்து, மதுமிதா, ராஜ்கபூர், டி.பி.கஜேந்திரன், ஜெகன் முதலானோரும் நடித்துள்ளனர். காசி விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். சுஜித் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது ‘மிர்ச்சி’ சிவா பேசும்போது, ‘‘சினிமாவில் பெரும்பாலான நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் ரசிகர்களில் பெரும்பாலான ரசிகர்கள் தங்களது நேரத்தை வீணாக்குகிறார்கள்! இப்படிப்பட்ட ரசிகர்களுக்கு நல்ல ஒரு கருத்தை கூறும் படம் தான் ‘அட்ரா மச்சான் விசிலு’. அதனை முழுக்க முழுக்க காமெடி பின்னணியில் படமாக்கியிருக்கிறார் திரைவாணன்’’ என்றார்.
தொடர்ந்து இயக்குனர் திரைவாணன் பேசும்போது, ‘‘இப்படம் சினிமா ரசிகர்கள் பற்றிய கதை என்றாலும் இதில் யாரையும் தாக்குவது மாதிரியோ, மனம் புண்படும் மாதிரியாகவோ காட்சிகள் இடம் பெறாது! காமெடி படம் என்றாலும் இதில் காதல், சென்டிமென்ட், வில்லத்தனம், அடி தடி என அனைத்து ஜனரஞ்சக அம்சங்களும் இருக்கிறது. இந்த கதைக்கு ‘மிர்ச்சி’ சிவா, பவர் ஸ்டார் சீனிவாசனை தவிர வேறு யாரும் பொருந்தாது என்பதால் அவர்களையே முக்கிய கேரக்டர்களில் நடிக்க வைத்துள்ளோம். அதைப்போல இந்த கதைக்கு புதுமுக நாயகி ஒருவர் தேவைப்பட்டார்! அப்படி தேடியபோது கிடைத்தவர் தான் பெங்களூரை சேர்ந்த நேனா சர்வார். இவர் படத்தில் மதுரை தமிழ் பேசி மதுரை பெண்ணாக நடித்துள்ளார். ‘கச்சேரி ஆரம்பம்’ படத்தை தொடர்ந்து 5 ஆண்டுகள் கழித்து ‘அட்ரா மச்சான் விசிலு’டன் ரசிகர்களை சந்திக்க வந்திருக்கிறேன். இப்படம் அனைத்து ரக ரசிகர்களுக்கும் ஏற்ற படமாக இருக்கும்’’ என்றார்.

‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் பேசும்போது, ‘‘நீங்க தான் படத்தின் ஹீரோ, ஹீரோயினுடன் உங்களுக்கு டூயட் எல்லாம் உண்டு’ என்று சொல்லி தான் என்னை இப்படத்தில் என்னை நடிக்க அழைத்து வந்தார்கள்! ஆனால் நடிக்க துவங்கிய பிறகு தான் தெரியும், படத்தில் வேறு ஒருவரும் ஹீரோவாக நடிக்கிறார் என்பது! படம் முடிகிற வரையிலும் ஹீரோயினை தொட கூட என்னை விடவில்லை. டூயட் பாடலை எல்லாம் கடைசியில் எடுப்பார்கள் என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் ஒரு நாள் திடீரென்று படம் முடிந்து விட்டது என்றார்கள்! எனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று நான் என்னையே ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்’’ என்று ‘பவர் ஸ்டார்’ பேசியதும் அரங்கத்தில் ஒரே சிரிப்பு!

‘அரசன் ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் கோபி தயாரித்துள்ள இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொளஞ்சி ட்ரைலர்


;