‘கோலிசோடா’, ‘பத்து எண்றதுக்குள்ள’ படங்களை தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கும் படம் ‘கடுகு’. விஜய் மில்டன் இயக்கிய ‘கோலி சோடா’ படத்தை தயாரித்த ‘ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ்’ பரத் சீனி தான் இப்படத்திற்கும் தயாரிப்பாளர். இப்படத்தில் பரத், இயக்குனர் ராஜகுமாரன், விஜய் மில்டனின் சகோதரரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான பரத் சீனி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு நடந்து வரும் இப்படம் ‘கோலிசோடா’ படம் எப்படி ரசிகர்களை கவர்ந்து வெற்றிப் படமாக அமைந்ததோ அதைப் போல இப்படமும் வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் பரத் சீனி. ‘கடுகு’வின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...
‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...