‘பட்டதாரி’ இசை வெளியீட்டு விழாவில் டி.சிவா பரபரப்பு பேச்சு!

ஹீரோ, ஹீரோயின் இல்லாமல் நடைபெற்ற இசை வெளியிட்டு விழா!

செய்திகள் 16-Jun-2016 1:03 PM IST VRC கருத்துக்கள்

‘GES MOVIES’ என்ற பட நிறுவனம் சார்பில் எஸ்.இளங்கோவன் லதா தயாரித்துள்ள படம் ‘பட்டதாரி’. இயக்குனர் களஞ்சியம் உதவியாளர் சங்கரபாண்டி இயக்கியுள்ள இப்படத்தில் அபி சரவணன் கதாநாயகனாகவும், அதிதி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ‘பூ’, ‘களவாணி’ முதலான படங்களுக்கு இசை அமைத்த எஸ்.எஸ்.குமரன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா இன்று காலை சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடந்தது. பாடல்களை தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா வெளியிட, இயக்குனர்கள் களஞ்சியம், சசி பெற்றுகொண்டனர். அதனை தொடர்ந்து டி.சிவா பேசும்போது, ‘‘இது போன்ற ஆடியோ விழாக்கள் நடத்துவது அப்படத்தின் புரொமோஷனுக்காக தான்! இது போன்ற விழாக்களில் திரையிடப்படும் டிரைலரும், பாடல்களும் தான் அப்படம் எப்படிப்பட்ட படம் என்பதை பார்வையாளர்களுக்கும் மீட்யாவுக்கும் எடுத்துச் செல்லும். ஆனால் இங்கு இப்படத்தின் டிரைலர் மட்டும் திரையிடப்பட்டு இரண்டு பாடல்களை ஒலிக்க (கேட்க) மட்டும் செய்தார்கள்! இதனால் யாருக்கு லாபம்? பாடல்களை விஷுவலாக திரையிடும்போது தான் அதற்கு ரசிகர்கள் மற்றும் மீடியா மூலம் விளம்பரம் கிடைக்கும். இதனை படக்குழுவினர் உணர வேண்டும்! இதனை நானும் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் அறிவுரையாக கூறுகிறேன்’’ என்று பரபரப்பாக பேசினார்! பொதுவாக இதுபோன்ற ஆடியோ விழாக்களில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் கலந்து கொள்வது வழக்கம்! ஆனால் இப்பட விழாவில் படத்தின் கதாநாயகன், கதாநாயகி உட்பட யாரையும் காணவில்லை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;