‘ராஜா மந்திரி’ பட இயக்குனரை பாராட்டிய ‘கபாலி’ இயக்குனர்!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மற்றுமொரு பெண் இயக்குனர்!

செய்திகள் 18-Jun-2016 12:00 PM IST VRC கருத்துக்கள்

’இறுதிச்சுற்று’ சுதா கொங்காராவை தொடர்ந்து ‘ ராஜா மந்திரி’ படம் மூலம் மற்றுமொரு பெண் இயக்குனர் தமிழ் சினிமாமில் அறிமுகமாகிறார். அவர் பெயர் உஷா கிருஷ்ணன்! இயக்குனர் சுசீந்திரனுடன் ‘பாண்டிநாடு’, ‘ஜீவா’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணி புரிந்த உஷா கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ராஜா மந்திரி’ திரைப்படம் வருகிற 24 ஆம தேதி ரிலீசாகிறது. நேற்று நடந்த இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் ‘கபாலி’ பட இயக்குனர் பா.ரஞ்சித், இயக்குனர்கள் சமுத்திரக்கனி, சசி, கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது இயக்குனர் ரஞ்சித் பேசும்போது, ‘‘சினிமாவை பொறுத்த வரையில் ஆண் இயக்குனர் பெண் இயக்குனர் என்ற வேறுபாடு கிடையாது. சினிமாவில் திறமை தான் முக்கியம். திறமை இருப்பவர்கள் யாராக இருந்தாலும் ஜெயிப்பார்கள். அந்த வகையில் உஷா கிருஷ்ணன் ஒரு திறமையான இயக்குனர் என்பதை அவர் இயக்கிய இப்படத்தின் காட்சிகளையும் பாடல்களையும் பார்த்தபோது தெரிந்து கொண்டேன். அவருக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு’’ என்று பாராட்டினார்.

அண்ணன், தம்பிக்கு இடையிலான உறவுகளை சொல்லும் இப்படத்தில் கலையரசன், காளி வெங்கட் ஆகியோர் அண்ணன், தம்பியாக நடித்திருக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை Etcetera Entertainment சார்பில் மதியழகன், ரம்யா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் விநியோக உரிமையை ‘ஆரா சினிமாஸ்’ கைபற்றியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;