முதல்பாதியில் முத்தம், இரண்டாம்பாதியில் இரத்தம்!

‘அச்சம் என்பது மடமையடா’ படம் எப்படிப்பட்டதாக இருக்கும் என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் குறிப்பிட்டிருக்கிறார்

செய்திகள் 25-Jun-2016 11:52 AM IST Chandru கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கும் படங்களுக்கென்றே தனிப்பட்ட ஒரு பாணி இருக்கிறது. எந்தக்கதையாக இருந்தாலும், அது அந்த பாணிக்குட்பட்டதாகவே இருக்கும். கௌதமின் இயக்கத்தில் உருவாகி விரைவில் வெளியாகவிருக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’வும் அவர் ஸ்டைலில் உருவாக்கப்பட்ட ஒரு படம்தான். புதுமையாக இப்படத்தில் எதையும் எதிர்பார்க்கத் தேவையில்லையென்றாலும், ஒரு சிம்பிளான கதையை கமர்ஷியல் விஷயத்துடன் அவர் சொல்லியிருக்கும் அழகியலுக்காகவே ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை போன்ற பெருநகரத்தின் ஏதோ ஒரு மூளையில், பெசன்ட் நகரிலோ அல்லது அண்ணாநகரிலோ அடிக்கடி நீங்கள் சந்திக்கும் ஒரு சாதாரண பையனின் கதையைப் பற்றித்தான் ‘அச்சம் என்பது மடமையடா’ பேசவிருக்கிறதாம். புதுப்புது இடங்களை தேடிப்பிடித்து, அங்கே பயணம் செய்து தன்னை உற்சகப்படுத்திக் கொள்ளும் பழக்கமுடைய இப்படத்தின் நாயகன் சிம்பு, ஓரிடத்தில் நாயகி மஞ்சிமா மோகனைப் பார்த்து காதல் வயப்படுகிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் அற்புதமான காதல் மெலடிகளோடு ரொமான்டிக்காக முதல்பாதி நகர்ந்து கொண்டிருக்கும்போது, மஞ்சிமாவுக்கு ஏற்படும் திடீர் பிரச்சனையால் படத்தின் போக்கே அதன்பிறகு மாறிவிடுமாம்.

காதல், காமெடி, அற்புதமான இசை என ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் முதல் பாதி ரசிகர்களுக்கு இனிமையான அனுபவத்தையும்... ரத்தம், துப்பாக்கிச் சத்தம் என இரண்டாம்பாதி வயலன்ஸாகவும் இருக்கும் என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என்னை நோக்கி பாயும் தொட்டே ட்ரைலர்


;