அப்பா அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா!

‘காதலின் பொன் வீதியில்’ ஐஸ்வர்யா அர்ஜுன்!

செய்திகள் 25-Jun-2016 12:25 PM IST VRC கருத்துக்கள்

பல வெற்றிப் படங்களை தயாரித்த அர்ஜுனின் ‘ஸ்ரீராம் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படம் ‘காதலின் பொன் வீதியில்’. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி அர்ஜுனே இயக்க, அவரது மகள் ஐஸ்வர்யா கதாநாயகியாக நடிக்கிறார். ‘பட்டத்து யானை’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா நடிக்கும் இரண்டாவது படம் இது. இப்படத்தில் கதாநாயகனாக சந்தன் என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.விஸ்வநாத், சுஹாசினி, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, சதீஷ், ‘யோகி’ பாபு, ப்ளாக் பாண்டி, போண்டா மணி ஆகியோரும் நடிக்கிறார்கள். மலையாள பட உலகை சேர்ந்த ஜாஸி கிஃப்ட் இசை அமைக்கிறார். ஹெச்.சி.வேணுகோபால் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்ற 22-ஆம் தேதி சென்னையில் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஹைதராபாத், டெல்லி, மும்பை, தர்மசாலா, லடாக் ஆகிய இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;