’சண்டிக்குதிரை’ விளம்பர பாடலில் 40 நட்சத்திரங்கள்!

ராஜ்கமலின் சண்டிக்குதிரை!

செய்திகள் 27-Jun-2016 12:13 PM IST VRC கருத்துக்கள்

‘சன்மூன் கம்பெனி’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ’சண்டிக்குதிரை’. இந்த படத்தில் சின்னத்திரையில் பிரபல நடிகராக விளங்கி வரும் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக புதுமுகம் மானஸா அறிமுகமாகிறார். இவர்களுடன் ‘கஞ்சா’ கருப்பு, டெல்லி கணேஷ், சூர்யகாந்த், டெல்லி கணேஷ், சூர்யகாந்த், போண்டா மணி, ரிஷா ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார் அன்புமதி! கதை ஆசிரியர், தொலைக்காட்சி தொடர் இயக்குனர் என்று பல முகங்கள் கொண்ட அன்புமதி இயக்கும் முதல் திரைப்படம் இது. ‘சண்டிக்குதிரை’ படம் குறித்து அவர் கூறும்போது,

‘‘தற்போதைய நவநாகரீக வாழ்க்கையில் மொபைல் ஃபோன் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. மொபைல் போன் செல்ஃபி மோகத்தால் ஏற்படும் விபரீதம் தான் இப்படத்தின் முக்கிய கரு. இப்படத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கிறார் என்றாலும் திரைக்கதை தான் முக்கிய ஹீரோ! இப்படதிற்காக ‘அச்சச்சோ ஆச வச்சேன்…’ என்று துவங்கும் ஒரு விளம்பர பாடலை உருவாக்கியிருக்கிறோம். இந்த பாடலில் 40 நட்சத்திரங்களுக்கும் மேல் நடிக்க வைத்துள்ளோம். அந்த பாடல் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிரது. புதுகோட்டை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ள இப்படம் விரைவில் ரிலீசாகும்’’ என்றார்.

இப்படத்திற்கு 6000-க்கும் மேற்பட்ட பக்தி பாடல்கள் எழுதியுள்ள வாரஸ்ரீ இசை அமைக்கிறார். இவர் இசை அமைக்கும் முதல் திரைப்படம் இது. கலை இயக்கத்தை கே.எஸ்.புவனா கவனிக்க, தினா, சதீஷ் நடனங்களை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;