90% முடிவடைந்த ‘சென்னை 28’ன் 2வது இன்னிங்ஸ்!

‘சென்னை 28’ன் முதல் பாகம் வெளிவந்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு 2ஆம் பாகத்தை எடுத்து வருகிறார் வெங்கட்பிரபு.

செய்திகள் 28-Jun-2016 11:57 AM IST Chandru கருத்துக்கள்

விளையாட்டாக ஒரு படமெடுத்து அது விஸ்வரூப வெற்றி பெற்றதென்றால் அது நிச்சயமாக ‘சென்னை 600028’ படமாகத்தான் இருக்க முடியும். ஜாலி, கேலி, காதல், கிரிக்கெட், குடி, கும்மாளம் என சென்னை இளைஞர்களின் வாழ்க்கையை அப்பட்டமாக பதிவு செய்திருந்த இப்படத்தைத் தொடர்ந்து இப்போது அதன் 2ஆம் பாகத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு.

இந்த வருடம் ஏப்ரல் 11ஆம் தேதி துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 90% முடிவடைந்துவிட்டதாம். விறுவிறுப்பாக படப்பிடிப்பை முடித்துவிட்டது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் களமிறங்கத் திட்டமிட்டிருக்கிறாராம் வெங்கட். அதோடு, இப்படத்திற்காக ஏற்கெனவே யுவனின் இசையில் பெரும்பாலான பாடல்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டனவாம். டீஸர், டிரைலர், இசை வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;