கன்னடத்தை தொடர்ந்து தெலுங்கிலும் மெட்ரோ!

கன்னடத்தை தொடர்ந்து தெலுங்கிலும் ரீ-மேக்காகும் ‘மெட்ரோ’

செய்திகள் 30-Jun-2016 10:23 AM IST VRC கருத்துக்கள்

சென்ற வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் படம் ‘மெட்ரோ’. செயின் பறிப்பு சம்பவங்களை வைத்து ஆனந்த் கிருஷ்ணன் இயக்கிய இப்படத்திற்கு பத்திரிகைகளின் பாராட்டுக்கள் கிடைத்திருப்பதோடு சினிமாவை சேர்ந்த இயக்குனர்கள் ஏ.ஆர். முருகதாஸ், சீனுராமி, நடிகர் சிபிராஜ், தயாரிப்பாளர் தனஞ்சயன் உட்பட பல பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழில் வெளியாவதற்கு முன்னாடியே ‘மெட்ரோ’வின் கன்னட ரீ-மேக் உரிமை விற்கப்பட்டுள்ள நிலையில் இப்படம் தெலுங்கிலும் ரீ-மேக் ஆகவிருக்கிறது. கன்னட சினிமாவை சேர்ந்த ‘புரொடக்‌ஷன் ஹவுஸ்’ முரளி குரப்பா ‘மெட்ரோ’வின் கன்னட உரிமையை கைபற்றியுள்ள நிலையில் தற்போது இப்படத்தை தெலுங்கில் ரீ-மேக் செய்து தயாரிக்கவும் பலத்த போட்டி ஏற்பட்டிருக்கிறது என்றும் அதற்கான பேச்சு வார்த்தைகள் இப்போது நடந்து வருகிறது என்றும் இப்பட குழுவினர் தெரித்தனர். அநேகமாக தமிழ் ‘மெட்ரோ’வை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணனே தெலுங்கிலும் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிரபார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீ யாழினி வீடியோ பாடல் - ராஜா ரங்குஸ்கி


;