சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’ ரிலீஸ் தேதி?

‘தில்லுக்கு துட்டு’ பட ரிலீஸ் எப்போது?

செய்திகள் 2-Jul-2016 10:39 AM IST VRC கருத்துக்கள்

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’ ஆகிய படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘தில்லுக்கு துட்டு’. ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பான இப்படத்தில் சந்தானத்துடன் கதாநாயகியாக ஷனன்யா நடித்துள்ளார். ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி புகழ் ராம்பாலா இயக்கியுள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்து இப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இப்படத்தை வரும் 7-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஹாரர் மற்றும் காமெடி ரக படமாக உருவாகியுள்ள ‘தில்லுக்கு துட்டு’விற்கு தமன் இசை அமைத்துள்லார். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;