‘மோகினி’யில் சமையல்கலை வல்லுனரான த்ரிஷா!

மாதேஷ் இயக்கத்தில் உருவாகும் ‘மோகினி’ படத்தில் நடிகை த்ரிஷா லண்டனிலுள்ள சமையல்கலை வல்லுனராக நடிக்கிறார்

செய்திகள் 4-Jul-2016 4:03 PM IST Chandru கருத்துக்கள்

‘நாயகி’ படத்தைத் தொடர்ந்து த்ரிஷா நடிக்கும் இன்னொரு ஹாரர் படம் ‘மோகினி’. இப்படத்தை ‘சிங்கம் 2’ படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுக்க முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ‘மதுர’ புகழ் ஆர்.மாதேஷ் இயக்குகிறார். சுகன்யா, கௌசல்யா, முகேஷ் திவாரி, யோகி பாபு, சாமிநாதன், ஆர்த்தி கணேஷ் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கும் ‘மோகினி’ படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார்.

ஜூன் 2ஆம் தேதி முதல் லண்டனில் படப்பிடிப்பு துவங்கிய ‘மோகினி’ படத்தில் த்ரிஷா ‘செஃப்’ கேரக்டரில் நடிக்கிறாராம். அதோடு, விதவிதமான சமையல்கள் குறித்தும், அதை எப்படிச் செய்வது என்பது குறித்தும் இணையதளத்தில் எழுதும் ‘பிளாக்கரா’கவும் அவர் நடிக்கிறாராம். லண்டனில் நடந்த படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து சென்னையிலும், அதன்பிறகு பாங்காக்கிலம் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;