தல ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

எப்போது ஆரம்பமாகும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த ‘தல 57’ படத்தின் பூஜை இன்று நடைபெறுகிறது

செய்திகள் 6-Jul-2016 9:43 AM IST Chandru கருத்துக்கள்

‘வேதாளம்’ படத்தின் சூப்பர்ஹிட் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கிறது ‘தல’ அஜித், இயக்குனர் சிவா கூட்டணி. இந்த முறையும் இவர்களுடன் கைகோர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆண்டனி எல்.ரூபன் எடிட்டிங் செய்ய, கபிலன் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். அஜித்திற்கு ஜோடியாக இப்படத்தில் அனுஷ்கா நடிக்கிறாராம்.

‘வேதாளம்’ படத்திற்குப் பிறகு காலில் செய்த ஆபரேஷன் காரணமாக ஓய்விலிருந்து வந்த அஜித் இப்போது பூரண குணமாகிவிட்டதால், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிகிறது. அதன் முன்னோட்டமாக இன்று ‘தல 57’ படத்திற்கான பூஜை நடைபெறவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் குறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் இன்று வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை டிரைலர்


;