ஜீவா - ஸ்ரீதிவ்யாவை மீண்டும் ஜோடியாக்கிய சுசீந்திரன்!

‘ஜீவா’ படக்கூட்டணியான இயக்குனர் சுசீந்திரன், நடிகர் விஷ்ணு, நடிகை ஸ்ரீதிவ்யா, இசையமைப்பாளர் டி.இமான் மீண்டும் கூட்டணி

செய்திகள் 12-Jul-2016 9:31 AM IST Chandru கருத்துக்கள்

‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் தங்களது திரையுலக வாழ்க்கையைத் துவங்கிய இயக்குனர் சுசீந்திரனும், நடிகர் விஷ்ணு விஷாலும் மீண்டும் ‘ஜீவா’ மூலம் கூட்டணி அமைத்து வெற்றியைச் சுவைத்தார்கள். இப்போது இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிவிருக்கிறார் என கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. ஆனால், இப்போது விஷ்ணுவுக்கு இரண்டாவது முறையாக ஜோடியாகியிருக்கிறார் ஸ்ரீதிவ்யா. ஏற்கெனவே சுசீந்திரன் இயக்கிய ‘ஜீவா’ படத்திலும் விஷ்ணுவுக்கு ஜோடி ஸ்ரீதிவ்யாதான்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் பார்த்திபனும் நடிப்பதாகத் தெரிகிறது. வரும் 15ஆம் தேதி முதல் பழனியில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிகிறது. டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வெண்ணிலா கபட்டி குழு 2 ட்ரைலர்


;