சூப்பர்ஹிட் அடித்த ‘ஹிப் ஹாப் தமிழா’வின் ஜல்லிக்கட்டு ஆல்பம்!

ஜூன் 25ஆம் தேதி யு டியூபில் வெளியிடப்பட்ட ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் ‘டக்கரு டக்கரு...’ ஆல்பம் 20 லட்சம் பார்வையிடல்களைப் பெற்றுள்ளது

செய்திகள் 12-Jul-2016 9:46 AM IST Chandru கருத்துக்கள்

‘இது மாட்டைப் பத்தின பிரச்சனை இல்ல...’ என்ற டேக் லைனையுடன் வெளியிடப்பட்ட ‘டக்கரு டக்கரு...’ ஜல்லிக்கட்டு ஆல்பம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்து, வரிகள் எழுதி, பாடி நடித்துள்ள இந்த ஆல்பம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. கார்ப்ரேட் நிறுவனங்கள் இந்தியாவிலுள்ள மாடுகளை அழிப்பதற்கு எப்படி சதித்திட்டம் தீட்டி வருகின்றன என நேரடியாக சுட்டிக்காட்டியுள்ள இந்த ‘டக்கரு டக்கரு...’ ஆல்பம் ஜூன் 25ஆம் தேதி யு டியூப்பில் வெளியிடப்பட்டது.

இந்த ஆல்பம் வெளியாகி 50 நாட்களை நெருங்கியுள்ள நிலையில், கிட்டத்தட்ட 20 லட்சம் பார்வையிடல்களைப் பெற்றுள்ளது. தமிழ் ரசிகர்களின் உணர்வு, கலாச்சாரம், பாரம்பரியம் சம்பந்தப்பட்ட விஷயத்தை முன்னிறுத்தி இந்த ஆல்பம் உருவாக்கப்பட்டிருப்பதாலும், ஜல்லிக்கட்டை ஆதரித்திருப்பதாலும் இத்தனை பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நட்பே துணை முதல் பார்வை வீடியோ


;