‘கபாலி’க்கு மரியாதை செய்த ‘ஐஸ் ஏஜ் 5’ டீம்!

‘கபாலி’யின் வட இந்திய ரிலீஸ் உரிமையை கைப்பற்றியிருக்கும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம் ‘கபாலி’ வெர்ஷன் ‘ஐஸ் ஏஜ் 5’ டிரைலரை வெளியிட்டுள்ளது

செய்திகள் 12-Jul-2016 11:05 AM IST Chandru கருத்துக்கள்

ஒரு ஹாலிவுட் படத்திற்கு இந்தியாவில் கவனம் கிடைக்க வேண்டுமென்பதற்காக ஒரு இந்திய படத்தின் புகழை, அதுவும் தமிழ் படத்தின் புகழை பயன்படுத்தியிருப்பது இதற்கு முன்பு இந்திய திரையுலக வரலாற்றில் நடந்திருக்குமா என்பது சந்தேகமே...! அதுவும், ‘ஐஸ் ஏஜ்’ என்ற உலகப்புகழ் பெற்ற அனிமேஷன் பட டீமே இந்த யுக்தியைப் பயன்படுத்தியிருப்பது ‘கபாலி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை உலகளவில் எகிறச் செய்துள்ளது. வரும் 15ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் ‘ஐஸ் ஏஜ்’ படத்தின் 5ஆம் பாகமான ‘ஐஸ் ஏஜ்: கொலிஸன் கோர்ஸ்’ படத்தை இந்தியாவில் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இதே நிறுவனம்தான் ‘கபாலி’ படத்தை வட இந்தியா முழுவதும் பெரிய அளவில் ரிலீஸ் செய்கிறது. 22ஆம் தேதி ‘கபாலி’யின் ரிலீஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டதால், அதற்கு முந்தைய வாரம் வெளியாகும் ‘ஐஸ் ஏஜ்’ படத்தின் மீது ரசிகர்களின் கவனத்தைத் திருப்புவதற்காக இந்நிறுவனம் ‘தலைவருக்கு மரியாதை’ என்ற பெயரில் கபாலி வெர்ஷன் ‘ஐஸ் ஏஜ் 5’ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘நெருப்புடா...’ பாடலைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த வீடியோவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வீடியோ இங்கே உங்களுக்காக..

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;