ஜி.வி., லாரன்ஸுடன் மலேசியா படப்பிடிப்பில் நிக்கி கல்ராணி!

‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ஆகிய படங்களுக்காக ஜி.வி. மற்றும் லாரன்ஸுடன் மலேசிய படப்பிடிப்பில் நிக்கி கல்ராணி

செய்திகள் 13-Jul-2016 10:24 AM IST Top 10 கருத்துக்கள்

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம் ஹிட்டான குஷியில் இருக்கும் நிக்கி கல்ராணி தற்போது அரை டஜன் படங்களை கையில் வைத்திருக்கிறார். ராகவா லாரன்ஸுடன் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ஜி.வி.பிரகாஷுடன் ‘கடவுள் இருக்கான் குமாரு’, விக்ரம் பிரபு தயாரித்து நடிக்கும் ‘நெருப்புடா’, ஜீவாவுக்கு ஜோடியாக ‘கீ’ என தமிழில் மட்டுமே 4 படங்களில் நடிக்கும் நிக்கி மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

மேற்கண்ட படங்களில், தற்போது ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. லாரன்ஸுடன் பாடல், ஆக்ஷன் காட்சிகளில் நிக்கி நடித்த காட்சிகளோடு ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாம். ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 நாட்கள் மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;