விசாகப்பட்டினத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பில் ‘சிங்கம் 3’

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சிங்கம்’ படத்தின் 3ஆம் பாகமான ‘எஸ் 3’யின் விசாகப்பட்டினம் ஷெட்யூல் நிறைவுப் பகுதியை எட்டுகிறது

செய்திகள் 13-Jul-2016 5:27 PM IST Chandru கருத்துக்கள்

ஹரி இயக்கத்தில் ஆறு, வேல் என அடுத்தடுத்த இரண்டு ஹிட் படங்களை கொடுத்த சூர்யா, ‘சிங்கம்’ படம் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியைச் சுவைத்தார். அதன்பிறகு எடுக்கப்பட்ட அதன் 2ஆம் பாகமும் சூப்பர்ஹிட் வசூலைக் குவித்தது. இந்நிலையில், தற்போது அதன் 3ஆம் பாகமான ‘எஸ் 3’ விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டொரு நாட்களில் அங்கே படப்பிடிப்பை முடித்துவிட்டது சென்னை திரும்ப இருக்கிறதாம் ‘எஸ் 3’ டீம். சென்னை ஷெட்யூல் முடிந்ததும் மலேசியாவிலும் சில காட்சிகள் படமாக்கப்படவிருக்கின்றனவாம்.

2017ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வரும் என எதிர்பார்க்கப்படும் ‘எஸ் 3’க்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;