பி.வாசு இயக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் ‘சிவலிங்கா’. இந்த படத்தை தமிழுக்கு ஏற்ற மாதிரி சில மாற்றங்கள் செய்து, ஒரே நேரத்தில் பி.வாசுவே தமிழிலும், தெலுங்கிலும் இயக்குகிறார். ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங் ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் வாசுவின் மகன் சக்தி வாசு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க, ‘சந்திரமுகி’ படத்தில் பி.வாசு இயக்கத்தில் நடித்த வடிவேலுவும் நடிக்கிறார். ‘வெற்றிவேல்’ படத்தை தயாரித்த ‘டிரைடன்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார்.
பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருக்கும் இப்படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது. இப்பூஜையில் ராதாரவி, பானுப்ரியா, ஊர்வசி, சக்தி வாசு ஆகியோர் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். தமன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் தொடங்குகிறது.
கடந்த 19-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான படம் ‘காஞ்சனா-3’. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த இந்த படத்தில்...
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கும் படம் ‘காஞ்சனா-3’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம்...
‘முனி’, ‘பரதேசி’, ‘காவியத்தலைவன்’ உட்பட பல படங்களில் நடித்துள்ள வேதிகா நடிப்பில் அடுத்து வெளியாக...