தமிழ் சினிமாவில் இது பேய் படங்களின் சீஸன்! அந்த வரிசையில் ‘பேய் இல்லாத ஒரு பேய் படம்’ என்ற கருத்துடன் விரைவில் வெளியாகவிருக்கிற படம் ‘என்னமா கதவுடுறானுங்க’. ‘அலெக்ஸ் கிரியேஷன்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் புதுமுகம் அர்வி தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஃபிரான்சிஸ் ராஜ் இயக்கியுள்ளார். கதாநாயகியாக புதுமுகம் ஷாலு நடித்துள்ளார். இவர்களுடன் சாம்ஸ், ரவி மரியா, ஜி.எம்.குமார், அம்பிகா, ஆலிஷா பட் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் குறித்து இயக்குனர் ஃபிரான்சிஸ் ராஜ் கூறும்போது,
‘‘பேய் படம் என்றாலே பயமுறுத்துகிற பேய், அட்டகாசம் செய்கிற பேய். ரத்தம் குடித்து பழி வாங்குகிற பேய் இப்படியான கதைகளை கொண்ட படங்களை தான் நாம் பெரும்பாலும் பார்த்திருப்போம்! ஆனால் இப்படம் பேய்க்கும் நேசிக்க கூடிய நல்ல இதயம் இருக்கிறது என்ற விஷயத்தை வைத்து படமாக்கியுள்ளோம்! பேய், ஆத்மா, ஆவி என்பதெல்லாம் நம் கூட வாழ்ந்தவர்களின் மறைவுக்கு பிறகு சொல்லப்படும் விஷயங்கள்! அப்படி வாழ்ந்தவர்களின் ஆத்மா அல்லது ஆவி ஒருபோதும் துரோகம் செய்யாது. இந்த விஷயத்தை அடிப்படையாக வைத்து தான் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ‘பேய் இல்லாத பேய் படம்’ என்பதற்கான விளக்கம் என்ன என்பது படம் பார்க்கும்போது தெரிய வரும்’’ என்றார் இயக்குனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவை சிவபாஸ்கர் கவனித்திருக்க, அறிமுக இசை அமைப்பாளர் ரவி விஜய் ஆனந்த் இசை அமைத்துள்ளார். இவர் இசையில் இப்படத்திற்காக யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர். அத்துடன் இப்படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள டைட்டில் பாடலில் 36 பேர் பாடியுள்ளனர் என்பதும் ஸ்பெஷலான விஷயம்! இது போன்ற பல ஸ்பெஷல்களுடன் உருவாகியுள்ள ‘என்னமா கதவுடுறானுங்க’ விரைவில் ரிலீசாகவிருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...