காட்டிலாகா அதிகாரியாக மாறும் சோனியா அகர்வால்?

காட்டிலாகா அதிகாரியாக மாறும் சோனியா அகர்வால்?

செய்திகள் 18-Jul-2016 11:06 AM IST Chandru கருத்துக்கள்

செல்வராகவன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சோனியா அகர்வாலின் சினிமா கேரியர் உச்சத்தில் துவங்கியது. ஆனால், செல்வா இயக்கத்தில் வெளிவந்த காதல்கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை தவிர்த்து அவருக்கு மற்ற இயக்குனர்களின் படங்களில் பெரிய பெயர் கிடைக்கவில்லை. இடையில் ‘திருட்டுப்பயலே’ படம் மட்டும் அவரின் ஹிட் லிஸ்ட்டில் இடம் பிடித்தது. இதனால் அவரின் சினிமா வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்தன. விவேக்குடன் அவர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த ‘பாலக்காட்டு மாதவ«ன்’ படம்தான் அவரின் கடைசி தமிழ்படம். அதன்பிறகு டிவி ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்குவதில் பிஸியாகிவிட்டார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழ்சினிமாவிற்குத் திரும்பியிருக்கிறார் சோனியா. பழனிவேல் இயக்கத்தில் உருவாகும் ‘சாயா’ என்ற ஹாரர் படத்தில் காட்டிலாகா அதிகாரியாக நடிக்கிறாராம் சோனியா அகர்வால். இது ஒரு பேய்ப்படமாக இருந்தாலும், வழக்கமாக இடம்பெறும் கெட்டதைச் செய்யும் பேயாக இல்லாமல், சமூகத்திற்கு... குறிப்பாக மாணவர்களுக்கு நல்லது செய்யும் பேயைப் பற்றிய கதையாம். அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தில் சோனியா அகர்வாலுக்கு அதிரடி சண்டை காட்சிகள் இருக்கிறது என தெரிவித்திருக்கிறார் இயக்குனர். சந்தோஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ‘டூரிங் டாக்கீஸ்’ பட நாயகி காயத்ரி நாயகியாக நடிக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அயோக்யா ட்ரைலர்


;