விவேக்கிற்கு ஜோடியாக ‘வேட்டையாடு விளையாடு’ நாயகி!

‘இறைவி’ படத்தைத் தொடர்ந்து, டிடெக்டிவ் கதையாக உருவாகவிருக்கும் புதிய படமொன்றில் விவேக்கிற்கு ஜோடியாக நடிக்கிறார் ‘வேட்டையாடு விளையாடு’ புகழ் கமாலினி முகர்ஜி

செய்திகள் 20-Jul-2016 11:40 AM IST Chandru கருத்துக்கள்

காமெடியன்கள் ஹீரோக்களாக ஜெயித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், அந்த டிரென்டை துவக்கி வைத்தவரான விவேக் சத்தமில்லாமல் தனது ஏரியாவான காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். அது ஒருபுறமிருந்தாலும், கதையின் நாயகனாக இப்போது ‘துப்பறியும் சங்கர்’ என்றொரு படத்திலும் நடித்து வருகிறார். 1970களை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் துப்பறியும் நிபுணராக விவேக் நடிக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘இறைவி’ படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்த கமாலினி முகர்ஜி, ‘துப்பறியும் சங்கரி’ல் விவேக்கிற்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படம் குறித்த மேலும் சில அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;