‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ ஷூட்டிங்கில் இணைந்த பார்த்திபன்!

விறுவிறு படப்பிடிப்பில் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’

செய்திகள் 26-Jul-2016 1:01 PM IST Chandru கருத்துக்கள்

‘கயல்’ சந்திரன், சாதனா டைட்டஸ் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடந்து வருகிறது. அறிமுக இயக்குனர் சுதர்சன் இயக்கும் இப்படத்தில் பார்த்திபனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். நேற்று சென்னையில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பில் பார்த்திபனும் கலந்து கொண்டு நடித்தார். ‘2 MOVIE BUFF’ என்ற நிறுவனமும் 'ACROSS BEYOND LIMITS' என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பார்த்திபன் நடிப்பது குறித்து ‘2 MOVIE BUFF’ நிறுவனத்தை சேர்ந்த ரகுநந்தன் கூறும்போது,

‘‘எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, அதை அப்படியே உள்வாங்கி திரையில் பிரதிபலிக்கும் திறமை பார்த்திபன் சாருக்கு உண்டு. இந்த கதாபாத்திரத்தை பற்றி இயக்குனர் சுதர்சன் என்னிடம் விவரிக்கும்போதே பார்த்திபன் சார் தான் இதற்கு சரியான நபர் என்பதை நாங்கள் முடிவு செய்து விட்டோம். அதைப் போல அவருக்கும் இந்த கதாபாத்திரம் ரொம்பவும் பிடித்து விட்டது. அதனால் அவரே தனது கேரக்டருக்கான கெட்-அப்பை எல்லாம் உருவாக்கினார். பார்த்திபன் சார் ஒரு மூத்த இயக்குனரும் கூட என்பதால் பல யோசனைகளையும், கருத்துக்களையும் எங்களுக்கு வழங்கியது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.
இப்படத்திற்கு அஷ்வத் இசை அமைக்க, ரெமியன் கலை இயக்கத்தை கவனிக்கிறார். ‘மிருதன்’ படப் புகழ வெங்கட் படத்தொகுப்பு செய்கிறார். ‘ஜில்லா’ பட புகழ் ஜெகன் ஸ்டன்ட் இயக்குனராக பணிபுரிகிறார். ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அயோக்யா ட்ரைலர்


;