ஆகஸ்ட் 3-ல் தர்மதுரை!

‘தர்மதுரை’ இசை, டிரைலர் ரிலீஸ் தேதி?

செய்திகள் 26-Jul-2016 2:34 PM IST VRC கருத்துக்கள்

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா ஜோடியாக நடிக்கும் ‘தர்மதுரை’யின் இறுதிகட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தை ‘ஸ்டுடியோ 9’ ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா அடுத்த (ஆகஸ்ட்) மாதம் 3-ஆம் தேதி வெகு விமரிசையாக சென்னையில் நடைபெறவிருக்கிறது. விஜய்சேதுபதியும் தமன்னாவும் முதன் முதலாக இணைந்து நடிக்கும் படம், தமன்னா சொந்த குரலில் தமிழ் பேசி நடிக்கும் படம், ரஜினி பட டைட்டிலில் உருவாகியுள்ள படம் என பல சிறப்புக்களுடன் உருவாகியுள்ள ‘தர்மதுரை’ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;