‘பலூனு’க்கு இசை அமைக்கும் யுவன் சங்கர் ராஜா!

ஜெய், அஞ்சலியுடன் இணையும் யுவன் சங்கர் ராஜா!

செய்திகள் 26-Jul-2016 3:07 PM IST VRC கருத்துக்கள்

ஜெய், அஞ்சலி நடித்து வரும் படம் ‘பலூன்’. '70 எம் எம்' நிறுவனம் சார்பில் டி.என்.அருண் பாலாஜி, கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை சினிஷ் இயக்கி வருகிறார். காதல் கலந்த திகில் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கான இசை அமைப்பாளர் முடிவாகாமல் இருந்து வந்தது. இப்போது இசை அமைப்பாளர் முடிவாகிவிட்டது. ‘பலூனு’க்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க ஒப்புக் கொண்டுள்ள தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். ‘பலூன்’ படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ஆர்.சரவணன் ஏற்றிருக்க, கலை இயக்கத்தை சக்தி வெங்கட் ராஜ் கவனிக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்பு துவங்கிய இப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;