ராஜ்கமலுக்கு ஜோடியாகும் பிரான்ஸ் நடிகை!

‘மேல் நாட்டு மருமகன்’ படத்தில் பிரான்ஸ் நடிகை!

செய்திகள் 27-Jul-2016 12:15 PM IST VRC கருத்துக்கள்

‘உதயா கிரியேஷன்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரித்துள்ள படம் ‘மேல் நாட்டு மருமகன்’. இப்படத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்க, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆன்ட்ரீயன் என்ற வெள்ளைக்கார பெண் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் வி.எஸ்.ராகவன், அஞ்சலி தேவி, அசோக் ராஜ், சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் எம்.எஸ்.எஸ். ‘மேல் நாட்டு மருமகன்’ படம் குறித்து கூறும்போது,

‘‘பணம், புகழ், காதல் என்று ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். இப்பட நாயகனின் ஆசையே ஒரு அயல்நாட்டு பெண்மணியை காதலித்து திருமணம் செய்துகொண்டு மேல்நாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்பது! பணம் சம்பாதிப்பதாக இருந்தால் அதை எந்த நாட்டிலும் சம்பாதித்து விடலாம். ஆனால் திருமணம் என்று வரும்போது பண்பாட்டிலும், கலாசாரத்திலும் நமது நாட்டை விட வேறு நாடு கிடையாது. அப்படி இருக்க, நாயகனின் ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் திரைக்கதை. இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, இப்போது அதற்கான் பணிகள் படு வேகமாக நடந்து வருகிறது’’ என்றார்.

இப்படத்தின் ஒளிப்பதிவை கே.கௌதம் கிருஷ்ணா கவனித்துள்ளார். வே.கிஷோர் குமார் இசை அமைத்துள்ளார். பிரபல படத்தொகுப்பாளரான ராஜ்கீர்த்தியின் மகன் விஜய் கீர்த்தி படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;