முதல்முறையாக 3 கோடி : சாதனைப் பட்டியலில் ரஜினி, சல்மான்!

கபாலி டீஸர், சுல்தான் டிரைலர் இரண்டுமே யு டியூபில் 3 கோடி பார்வையிடல்களை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.

செய்திகள் 28-Jul-2016 12:52 PM IST Chandru கருத்துக்கள்

படம் வெளிவருவதற்கு முன்பே பல சாதனைகளைப் படைத்த ‘கபாலி’ திரைப்படம், படம் வெளிவந்த பிறகும் பல்வேறு சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. பின்னே... சூப்பர்ஸ்டார் படம் ஆயிற்றே! முதல் 3 மூன்று நாளில் உலகளவில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த ‘கபாலி’ திரைப்படம் இப்போது புதிய சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறது. ஆம்... இந்திய அளவில் 3 கோடி பார்வையிடல்களை எட்டிய முதல் டீஸர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறது ‘கபாலி’. மே 1ஆம் தேதி வெளியான இந்த டீஸர், 3 மாதத்திற்குள்ளாகவே இந்த சாதனையைப் படைத்திருக்கிறது. இன்னும் இந்த டீஸரை தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

ஆனால், 3 கோடி சாதனையை முதலில் எட்டியவர் என்றால் அது சல்மான்கான் தான். டீஸரைப் பொறுத்தவரை ‘கபாலி’ முதல் டீஸர் என்றாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சல்மான் கானின் ‘சுல்தான்’ டிரைலரே 3 கோடி பார்வையிடல்களை எட்டிய சாதனையை முதலில் படைத்துள்ளது. ஆனால், இந்த சாதனையைச் செய்வதற்கு கபாலியைவிட 3 வாரங்கள் குறைவாகவே எடுத்துக் கொண்டுள்ளது சுல்தான்.

தற்போதைய நிலவரப்படி, கபாலிக்கும் சுல்தானுக்குமிடையே 1 லட்சம் பார்வையிடல்களே வித்தியாசம் உள்ளன. சுல்தான் டிரைலரை, கபாலி டீஸர் கூடிய விரைவில் முந்தி முதல் இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;