ஜி.வி.யுடன் ‘KIK’ல் இணையும் சந்தானம்?

ஜி.வி.யுடன் ‘KIK’ல் இணையும் சந்தானம்?

செய்திகள் 28-Jul-2016 3:17 PM IST VRC கருத்துக்கள்

எம்.ராஜேஷ் இயக்கிய அத்தனை படங்களிலும் முக்கியமான கேரக்டர்களில் நடித்தவர் சந்தானம்! எம்.ராஜேஷ் தற்போது இயக்கி வரும் படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சந்தானம் நடிக்கவில்லை என்று கூறப்பட்டு வந்தது. காரணம் சந்தானம் இப்போது ஹீரோவாகி விட்டதால் இதுபோன்ற வேடங்களில் நடிக்க அவர் விரும்பவில்லையாம்! ஆனால் ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த படங்களின் வெற்றிக்கு சந்தானத்தின் பங்கு மிக முக்கியமானதாக இருந்ததால் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்திலும் சந்தானத்தின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று நினைத்த இயக்குனர் ராஜேஷுக்கு, ஒரு கௌரவ வேடத்தில் நடித்து கொடுக்க சந்தானம் சம்மதம் தெரிவித்துள்ளாராம்! இதனால் எம்.ராஜேஷ், சந்தானம் மீண்டும் இணையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது! ‘கடவுள் இருக்கான் குமாரு’வில் ஜி.வி.பிரகாஷுடன் ஆனந்தி, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் இப்போது சந்தானமும் இணையவிருப்பதால் ‘KIK’ன் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;