‘கபாலி’யின் அதிகாரபூர்வ வசூல் : தாணு அறிவிப்பு

நேற்று நடந்த ‘கபாலி’ சக்சஸ் மீட்டில் படம் எத்தனை கோடிகளை வசூல் செய்துள்ளது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் தாணு

செய்திகள் 29-Jul-2016 9:53 AM IST Chandru கருத்துக்கள்

படத்தின் வெளியீட்டிற்கு முன்பே ரிலீஸ் ரைட்ஸ் வியாபாரத்தில் மட்டுமே 200 கோடிகளுக்கு மேல் சம்பாதித்துள்ளதாக கூறப்பட்ட ‘கபாலி’ திரைப்படம் உலகளவில் பாலிவுட் படங்களை மிஞ்சும் அளவிற்கு வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது. முதல் நாளில் மட்டுமே 100 கோடிகளுக்கும் மேல் உலகளவில் வசூல் செய்த ‘கபாலி’ முதல் 3 நாட்களில் 220 கோடியைத் தாண்டியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை ‘கபாலி’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் உள்ள ல ராயல் மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது. ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா போன்ற முக்கிய நட்சத்திரங்களைத் தவிர்த்து மற்ற படக்குழுவினர் பெரும்பாலும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். விழாவின்போது, ‘‘கபாலி திரைப்படம் இதுவரை உலகளவில் தோராயமாக 326 கோடிகளை வசூலித்துள்ளது’’ என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அறிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஏற்கெனவே 3 மொழிகள் பேசிய ‘கபாலி’ இன்று மலாய் மொழியிலும் வெளியாகிறது. வரும் வாரங்களில் சீனா மற்றும் ஜப்பான் மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;