‘காற்று வெளியிடை’யில் கார்த்திக்கு நண்பராகும் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்!

கார்த்தியின் நண்பராக வத்சன் நடராஜன்!

செய்திகள் 30-Jul-2016 11:28 AM IST VRC கருத்துக்கள்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து முடிந்தது. இப்படத்தில் 'Unarviyam' என்ற தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், வத்சன் நடராஜன் கார்த்திக்கு நண்பராக நடிக்கிறார். ஊட்டியில் நடந்த படப்பிடிப்பில் 5 நாட்கள் கலந்துகொண்டு கார்த்தியுடன் நடித்த வத்சன் நடராஜன் அடுத்து சென்னை மற்றும் காஷ்மீரில் நடைபெறவிருக்கும் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளவிருக்கிறாராம். மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக்கு நண்பராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதை எண்ணி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள வத்சன் நடராஜன் கிருஷ்ணா, ஸ்வாதி நடித்து வரும் ‘யாக்கை’ படத்திலும் நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;